பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு

பூண்டி மாதா பவனி வந்தபோது பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பின் தொடர்ந்து வந்தனர்.
பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற புதுமை இரவு வழிபாடு
பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற புதுமை இரவு வழிபாடு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை, அனைத்து மக்களின் நலன்களுக்காகவும் புதுமை இரவு வழிபாடு நிகழ்ச்சி நடைபெறும்.

அவ்வகையில் மார்ச் மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று மாலை புதுமை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மறை மாவட்ட அருட்தந்தை ஆல்பர்ட் தலைமை தாங்கினார்.

திருப்பலிக்கு பின்னர் பூண்டி மாதாவின் பவனி நடைபெற்றது. பவனியின்போது பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பின் தொடர்ந்து வந்தனர். பவனி நிறைவடைந்ததும் குணமளிக்கும் நற்செய்தி வழிபாடு நடைபெற்றது. நிறைவாக நிறை ஆசிருடன் புதுமை இரவு வழிபாடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Also Read
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் செப்டம்பர் 17-ந் தேதி கும்பாபிஷேகம்
பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற புதுமை இரவு வழிபாடு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com