ராணிப்பேட்டை: 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கங்காதர ஈஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ராணிப்பேட்டை: 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கங்காதர ஈஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தோப்புக்கனா பகுதியில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கங்காதர ஈஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக திருக்கோவில் மூலவர் மற்றும் அன்னபூரணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com