பூச்சொரிதல் விழாவிற்காக பூத்தட்டுகளை சுமந்துகொண்டு ஊர்வலமாக வந்த பக்தர்கள்
பூச்சொரிதல் விழாவிற்காக பூத்தட்டுகளை சுமந்துகொண்டு ஊர்வலமாக வந்த பக்தர்கள்

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா தொடங்கியது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.
Published on

சமயபுரம்,

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி கோவிலில் இருந்து யானை மீது பூத்தட்டுகளை வைத்து குருக்கள் சுமந்து வர, யானை முன்பு ஏராளமான பக்தர்கள் கைகளில் பூத்தட்டுகளை ஏந்தியவாறு கோவிலில் இருந்து புறப்பட்டு தேரோடும் வீதி, கடைவீதி, சன்னதி வீதி வழியாக ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.

அந்த பூக்கள், அம்மனுக்கு சாற்றப்பட்டன. பின்னர் காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்கியது. அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டார். திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், பல்வேறு வாகனங்களிலும், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும் அம்மன் படத்தை வைத்து, ஊர்வலமாக ஏராளமான பக்தர்கள் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

விழாவையொட்டி, 1,500-க்கும் மேற்பட்ட போலீசார், குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று காலை 9 மணிக்கு பிறகே கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 9 மணியில் இருந்து கட்டணமில்லா தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Also Read
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் செப்டம்பர் 17-ந் தேதி கும்பாபிஷேகம்
பூச்சொரிதல் விழாவிற்காக பூத்தட்டுகளை சுமந்துகொண்டு ஊர்வலமாக வந்த பக்தர்கள்
X

Daily Thanthi
www.dailythanthi.com