சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றம்

திருவிழாவின் 6-ம் நாள் பட்டு பல்லக்கில் சுவாமி பவனி வருதல், 7-ம் நாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
திருவிழா கொடியேற்றம்
திருவிழா கொடியேற்றம்
Published on

மதுரை,

சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை நாராயண பெருமாள் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலின் 50-வது ஆண்டு பிரம்மோற்சவம் திருவிழா 11 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கேடயத்தில் திருவிழா கொடி அலங்கரிக்கப்பட்டு வலம் வந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. மாலை அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று(வெள்ளிக்கிழமை) மாலை சிம்ம வாகனத்தில் சுவாமி பவனி வருகிறார். 6-ம் நாள் பட்டு பல்லக்கில் சுவாமி பவனி வருதல், 7-ம் நாள் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதுதவிர ராமநவமி நாளில் (27.3.2026) சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. 28-ம் தேதி புஷ்ப யாகம், 29-ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

Also Read
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
திருவிழா கொடியேற்றம்
X

Daily Thanthi
www.dailythanthi.com