

கணபதி,
கோவை கணபதி சத்திரோடு மணியகாரம்பாளையம் பிரிவு அண்ணாநகர் பகுதியில் பழமைவாய்ந்த ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அம்மனுக்கு அணிகலன்கள், ஆபரணங்கள் அணிவித்தும், புத்தம்புது வண்ணப் பட்டாடை அணிவித்தும் பலவண்ண மலர்களால் ஆன மாலைகள் அணிவித்தும் அலங்காரம் செய்விக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து, அம்மனை வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஆதிபராசக்தி பீடத்தில் வீற்றிருக்கும் ஆதிபராசக்தி அம்மன், ஐப்பசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று, சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பெருந்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பெண் பக்தர்கள், ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டனர்.