ஸ்ரீகாளஹஸ்தி நவராத்திரி உற்சவம்: ஸ்கந்தமாதா தேவி அலங்காரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார்

நவராத்திரி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அன்னையின் தெய்வீக திருக்கோலத்தை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி நவராத்திரி உற்சவம், ஸ்கந்தமாதா தேவி அலங்காரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளினார்.
ஸ்கந்தமாதா தேவி அலங்காரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார்
Published on: 

ஸ்ரீகாளஹஸ்தி,

ஸ்ரீகாளஹஸ்தியில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில் நேற்று ஸ்கந்தமாதா தேவி அலங்காரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளினார்.

நவராத்திரி உற்சவம்

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. பக்தர்களை கவரும் வகையில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நவராத்திரி விழாவின் 5-வது நாளான நேற்று உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஸ்கந்தமாதா தேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அன்னையின் தெய்வீக திருக்கோலத்தை தரிசனம் செய்தனர்.

லலிதா தேவி அலங்காரம்

இதேபோல் சிவன் கோவிலில் வீற்றிருக்கும் கனக துர்க்கையம்மனுக்கு லலிதா தேவி அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப மகாதீபாராதனை நடைபெற்றது.

மேலும் ஸ்ரீகாளஹஸ்தி முத்தியாலம்மன் கோவில் தெருவில் வீற்றிருக்கும் முத்தியாலம்மனுக்கு ஸ்கந்தமாதா தேவி அலங்காரம் செய்யப்பட்டது. ஏழுகங்கையம்மன் கோவிலில் வீற்றிருக்கும் கங்கையம்மனுக்கும் ஸ்கந்தமாதா தேவி அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கோவில்களுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

ரெங்கநாயகி தாயார்
ரெங்கநாயகி தாயார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயார்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரெங்கநாயகி தாயார் சன்னதியில் நடைபெற்று வரும் நவராத்திரி உற்சவத்தின் 4ம் நாளான நேற்று (15.10.2026), மாலை ஸ்ரீ ரெங்கநாயகி தாயார், சிறப்பு அலங்காரத்தில், மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

சமயபுரம் மாரியமம்ன்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி பெருவிழாவின் 5ம் நாளான நேற்று (15.10.2026) மாலை, சமயபுரத்தாள், காளகா அம்பிகை அலங்காரத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com