ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவம்- நிறைவு நாளில் இயற்பா சாற்றுமுறை சேவை

ஆடிப்பூர உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆண்டாளை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் சன்னதியில் ஆடிப்பூரம் உற்சவம்: நிறைவு நாள் சிறப்பு அலங்காரம்
ஆடிப்பூர உற்சவம், சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்
Published on

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதி ஸ்ரீ வெளி ஆண்டாள் சன்னதியில் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியால் சேவை சாதித்தார். ஆண்டாளுக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது.

அவ்வகையில் ஆடிப்பூர நன்னாளான 14.8.2026 அன்று ஸ்ரீரங்கம் வடகாவிரியில் இருந்து வெள்ளி குடத்தில் யானை மீது வைத்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு ஆண்டாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, ஆண்டாள் நாச்சியார், கல்யாண திருக்கோலத்தில் சேவை சாதித்தார். இதனை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது.

ஆடிப்பூர உற்சவம் நிறைவு

ஆடிப்பூரம் உற்சவத்தின் 11வது மற்றும் நிறைவு நாளான நேற்று (15.08.2026) ஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள இயற்பா சாற்றுமுறையும், சிறப்பு ஆரத்தியும் நடந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோல் ரங்கநாதர் கோவிலில் உள்ள பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்ற உற்சவத்தில், தினமும் வெவ்வேறு திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com