

ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருக்கோயிலில் உள்ள பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் இந்த உற்சவத்தில், தினமும் வெவ்வேறு திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அவ்வகையில் ஆடிப்பூரம் உற்சவத்தின் 9ம் நாளான இன்று (13.08.2026), மூலவர் செல்வநாராயணன் (மேல் கோட்டை திருநாராயணபுரம்) திருக்கோலத்திலும், உற்சவர் உலகளந்த பெருமாள் திருக்கோலத்திலும் எழுந்தருளி சேவை சாதித்தார். இன்றைய உற்சவ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதி ஸ்ரீ வெளி ஆண்டாள் சன்னதியிலும் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. 9ம் நாளான இன்று (13.08.2026) ஆண்டாள் நாச்சியார், ராஜா தர்பார் திருக்கோலத்தில் சேவை சாதித்தார்.
இதனை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.