ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் வசந்த உற்சவம்

ஸ்ரீரங்கத்தில் தாயார் வசந்த உற்சவம் வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் வசந்த உற்சவம்
ரெங்க நாச்சியார் வசந்த உற்சவ சூர்ணாபிஷேகம்
Published on

ஸ்ரீரங்கம் :

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம் (ரெங்க நாச்சியார் வசந்த உற்சவம்) நேற்று (13ம் தேதி) தொடங்கியது.

வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபம் வந்தார். அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.00 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இந்த வசந்த உற்சவம் வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவ விழாவையொட்டி இரவு 8 மணிக்கு மேல் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com