

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா கடந்த ஏழாம் தேதி (7.3.2026) கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதனை தொடர்ந்து பெரிய மாரியம்மன் தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்வு (தீமிதித்தல்) வருகிற 18ஆம் தேதி மதியம் 1.35க்கு மேல் நடைபெறுகிறது .
இந்த நிலையில் பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு கோவிலில் காப்பு சீட்டும், கைப்பட்டையும் வழங்கப்படுகிறது.
இதுபற்றி கோவில் நிர்வாக அதிகாரி ஜோதிலட்சுமி கூறுகையில், “கொடியேறிய நாளிலிருந்து பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு கோவிலில் காப்புச்சீட்டும் கை பட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. பூக்குழி இறங்கும் பக்தர்கள் கோவிலில் இவற்றை பெற்றுக் கொள்ளலாம். பக்தர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்
கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் கோவிலில் பக்தர்கள் இடையே நெரிசல் குறையும்.