விடுமுறை தினம்.. திருச்செந்தூரில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
விடுமுறை தினத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள்
Published on

திருச்செந்தூர்,

விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

காத்திருப்பு நேரம்

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரம் ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com