

கபிஸ்தலம்,
கபிஸ்தலம் அருகே அலவந்திபுரம் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே அலவந்திபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலாம்பிகை சமேத ஶ்ரீ ஐயனார் சுவாமி ஆலயத்தை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
விழாவை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேள தாழங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைபெற்று, ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலாம்பிகை சமேத ஶ்ரீ ஐயனார் சுவாமி விமான கலசம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.