

சப்த கன்னியர்களில் ஒருவரான வாராகி அம்மன் (வராகி அம்மன்), தேய்பிறை பஞ்சமி திதியில் அவதரித்தார். எனவே, பஞ்சமி தினத்தன்று, குறிப்பாக தேய்பிறை பஞ்சமி நாளில் இந்த அன்னையை வழிபாடு செய்வது, சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.
அவ்கையில் ஐப்பசி தேய்பிறை பஞ்சமி தினமான இன்று, வராகி அன்னையை வழிபடுவதற்கு சிறப்பான நாள் ஆகும். கோவில்களில் வாராகி அம்மனுக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. வீடுகளில் வாராகி யந்திரம் மற்றும் விக்ரசம் வைத்திருப்பவர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்கள். இன்று சிவப்பு நிற மலர்களை கொண்டு அன்னையை அலங்கரித்து வணங்குவது சிறப்பு.
பானகம், உளுந்து வடை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாதுளை, சிவப்பு அவல், ஏதேனும் இனிப்பு, பாயசம் அல்லது வெல்லம் போன்ற பொருட்களில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்யலாம்.
யந்திரம், விக்ரகம் இல்லாதவர்கள் வீட்டில் ஐந்து விளக்கேற்றி அந்த விளக்கில் வாராகி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும். வாராகி அன்னைக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்தி வழிபடுவது, மிகவும் சிறப்பான பலனை தரும். தாயை போன்ற இரக்கமும், தயாள குணமும் கொண்ட வாராகி அன்னையை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் ஏற்றங்கள் ஏற்படும் என்பது நம்பிக்கை.