திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி, தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தெப்ப உற்சவம்
தெப்ப உற்சவம்
Published on

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசி மகம் திருவிழா கடந்த22-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு தினமும் காலை திருவீதி புறப்பாடும், இரவில் வாகன சேவையும் நடைபெற்றது. சிம்ம வாகனம், அனுமன் வாகனம், ஷேசவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தக்ளுக்கு அருள்பாலித்தார்.

மேலும் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவம், சூர்ணாபிஷேகமும், தங்கத் தோளிக்கினியாள் திருவீதி புறப்பாடு, குதிரை வாகனப் புறப்பாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி, தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருக்குளக்கரையில் பலர் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். இன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com