திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேரோட்டம்
தேரோட்டம்
Published on

திருவெண்காடு,

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக திகழும் இக்கோவிலின் இந்திர பெருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒன்பதாம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் உடன் சுவாமி-அம்பாள் 3 தேர்களில் எழுந்தருள மகா தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூன்று தேரையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்தது. வழியெங்கும் சுவாமி- அம்பாளுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்தும் ஆரத்தி எடுத்தும் வழிபாடு நடத்தினர்.

Also Read
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசி திருவிழா- பெருமாள் தெப்ப உற்சவம்
தேரோட்டம்
X

Daily Thanthi
www.dailythanthi.com