திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்

விழாவில் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
தேரோட்டம்
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

வெயிலுகந்தம்மன் கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் திருநாளான நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி காலை 6.30 மணியளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பின் தேர் வடம்பிடிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் காலை 7.30 மணியளவில் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com