ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது திருப்பவித்ரோத்சவம்

சந்திரபுஷ்கரணி தெப்பக்குளத்தில் நம்பெருமாள் முன்னிலையில் சின்ன பெருமாள் என்கிற தீர்த்தபேரர் தீர்த்தவாரி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது திருப்பவித்ரோத்சவம்
தீர்த்தவாரி
Published on

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் விழா சிறப்பாக நடைபெற்றது. விழா நாட்களில் உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்தின் அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேவை நிறைவில் நம்பெருமாளுக்கு திருவந்திக்காப்பு என்னும் சிறப்பு ஆரத்தி நடந்தது.

சந்திரபுஷ்கரணி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி

விழாவின் நிறைவு நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது. சந்திரபுஷ்கரணி தெப்பக்குளத்தில் நம்பெருமாளுக்கு பதிலாக அவர் முன்னிலையில் சின்ன பெருமாள் என்கிற தீர்த்தபேரர் தீர்த்தவாரி கண்டருளினார்.

நம்பெருமாள் கரையில் நின்றவாறு சின்ன பெருமாள் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருமஞ்சனம்

தீர்த்தவாரிக்கு பிறகு நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளினார். பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து இன்று இரவு 8.30 மணிக்கு புறப்படும் நம்பெருமாள், படிப்பு கண்டருளி இரவு 9.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com