

திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வரும் 24ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் காலை, மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சிறப்பு உற்சவங்களும் விமரிசையாக நடைபெறும். காலை, மாலை இருவேளையும் வேதபாராயணம் நடக்கிறது.
அவ்வகையில் விழாவின் 3-வது நாளான இன்று காலை உற்சவர் தீர்த்தீஸ்வரர், பூத வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந் தேதி ரிஷப வாகன வீதி உலாவும், 20-ந் தேதி தேரோட்டமும், 21 தேதி இரவு தீர்த்தீஸ்வரர்-திரிபுரசுந்தரி அம்பாள் திருக்கல்யாணமும், 23-ந் தேதி காலை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.