திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர பெருவிழா

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் 29-ம் தேதி நடைபெறும்.
சுவாமி வீதி உலா
சுவாமி வீதி உலா
Published on

திருவாரூர்:

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா விமரிசையாக நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து வழிபடுவார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டின் பங்குனி உத்தர பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று (14.03.2026) இரவு அதிகாரநந்தி, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் ஐங்கலகாசு வினாயகர், சுப்ரமணியர் மற்றும் ஆதி சண்டிகேஸ்வரர் ஆகியோர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகர்வாக, மார்ச் 29-ம் தேதி ஆழித்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.

Also Read
மிளகாய் அரைத்து பூசினால் நீதி வழங்கும் அம்மன்
சுவாமி வீதி உலா
X

Daily Thanthi
www.dailythanthi.com