திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம்; டிச.6 முதல் 14 வரை நடக்கிறது

பிரம்மோற்சவத்தை யொட்டி, கோவிலில் மராமத்து பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம்; டிச.6 முதல் 14 வரை நடக்கிறது
Published on: 

திருப்பதி

திருச்சானூர் பத்மாவதி தாயார்கோவில் பிரம்மோற்சவம் வருகிற டிசம்பர் 6 முதல் 14 வரை நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்குகிறது.அன்றிரவு சின்ன சேஷ வாகனத் தில் தாயார் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

டிசம்பர் 11ஆம் தேதி காலை சர்வ பூபாள வாகனமும், மாலை தங்க தேரோட் டமும், இரவு கருட வாகன சேவையும் நடைபெறுகிறது. 7ஆம் நாளான டிசம்பர் 12ஆம் தேதி காலை சூரிய பிரபை, இரவுசந்திரபிரபை, 8ஆம் நாளான டிசம்பர் 13 ஆம் தேதி காலை தேர்த்திரு விழாவும், அன்றிரவு அஸ்வ வாகன சேவையும் இதனை தொடர்ந்து நிறைவு நாளான டிசம்பர் 14ஆம் தேதிகாலை கோவில் வளாகத்தில் உள்ள பத்ம குளத்தில் பஞ்சமி தீர்த் தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று மாலை பிரம்மோற்சவ கொடி இறக்கநிகழ்ச்சியுடன் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

இந்த பிரம்மோற்சவத்தை யொட்டி, கோவிலில் மராமத்து பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவவிழாவினையொட்டி டிசம்பர் 1ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம், குங்கும அர்ச்சனை உட்பட அனைத்து ஆர்ஜித சேவைகளும்ரத்துசெய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

X