திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் - தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு

வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் - தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு
Published on: 

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) 20 முதல் 29-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்க வாசல் வழியாக சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். அதற்கான தரிசன டிக்கெட்டுகள், டோக்கன்கள் வெளியிடப்பட உள்ளன.

தேவஸ்தானம் அறிவிப்பு

அதன்படி இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“* 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

* டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை ஏகாதசி, துவாதசி என 2 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று பக்தர்கள் வழிபட 'ஸ்லாட்' இலவச தரிசன டோக்கன்களை பெற பக்தர்கள் 'இ-டிப்' (எலக்ட்ரானிக்ஸ் குலுக்கல்) முறையில் பதிவு செய்யலாம். இந்தப் பதிவு டிசம் பர் 1-ந்தேதி காலை 10 மணியில் இருந்து டிசம்பர் 5-ந்தேதி மாலை 5 மணி வரை நடக்கிறது.

* 7-ந் தேதி மாலை 3 மணிக்கு 'இ-டிப்' முறை மூலம் ஸ்லாட் இலவச தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

* 8-ந் தேதி காணிக்கையாளர்கள் தரிசன ஒதுக்கீட்டுக்கான டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in வழியாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X