திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா தேரோட்டம்

வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
மாசித் திருவிழா தேரோட்டம்
மாசித் திருவிழா தேரோட்டம்
Published on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலு கந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவிழா காலங்களில் அம்மன் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் எழுந்தருளினார். காலை 7.30 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வந்து மீண்டும் நிலையை சென்றடைந்தது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Also Read
விழுப்புரம்: ஒதியத்தூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம்
மாசித் திருவிழா தேரோட்டம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com