பிரம்மோற்சவ விழா... திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

43 அடி உயரம், 47 டன் எடை கொண்ட பிரமாண்ட தேரில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவ விழா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது
தேரோட்டம்
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடந்து வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்வாக, 5-வது நாளில் நடைபெற்ற கருட சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் அனுமந்த வாகன சேவை, தங்கத் தேரோட்டம் மற்றும் கஜ வாகன சேவை நடைபெற்றது. ஏழாம் நாளான நேற்று சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை வாகன சேவை நடைபெற்றது. வாகன வீதிஉலாவின்போது ஏராளமான கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

திருப்பதி பிரம்மோற்சவ விழா, தேரோட்டம்
தேரோட்டம்

தேரோட்டம்

இந்நிலையில் விழாவின் 8-ம் நாளான இன்று காலை ரதோற்சவம் (பெரிய தேரோட்டம்) வெகு விமரிசையாக நடைபெற்றது. 43 அடி உயரம், 47 டன் எடை கொண்ட பிரமாண்ட மரத்தேரில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து வழிபட்டனர்.

தேரோட்ட நிகழ்வில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய தலைவர் பி.ஆர். நாயுடு, செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா, நிர்வாக குழு உறுப்பினர்கள், கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சவுத்ரி, தலைமை விஜிலன்ஸ் அதிகாரி முரளிகிருஷ்ணா, பொறியியல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com