திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா

பிரம்மோற்சவ சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி
புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி
Published on

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், வாகன புறப்பாடு நடைபெறுகிறது. நேற்று இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சுவாமி வாகன புறப்பாடு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள், பொருளாளர் பரமானந்தம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மே 30-ந்தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com