விஜயதசமி: நெல்லை சரஸ்வதி அம்மன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலெக்டர் தன் மகளை மடியில் அமர வைத்து, கையை பிடித்து தட்டில் உள்ள அரிசியில் எழுதவைத்து கல்வியை தொடங்கினார்.
விஜயதசமி: நெல்லை சரஸ்வதி அம்மன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர், தன் மகளின் கையை பிடித்து எழுதிய காட்சி
Published on: 

நெல்லை,

விஜயதசமியை முன்னிட்டு நெல்லை டவுன் சரஸ்வதி அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

வித்யாரம்பம்

விஜயதசமி நாளில் புதிய தொழில் தொடங்குதல், குழந்தைகளுக்கு கல்வியை தொடங்குவது (வித்யாரம்பம்) போன்ற பல்வேறு தொடக்க நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அது வெற்றியை தேடித்தரும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் இன்று விஜயதசமியையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நெல்லை டவுன் கீழரதவீதியில் உள்ள சரஸ்வதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து வழிபட்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் அமர்ந்து பெரிய தட்டில் பரப்பி வைக்கப்பட்ட நெல், அரிசியல் குழந்தையின் கையை பிடித்து ‘அ, 1, A’ போன்ற எழுத்துகளை எழுதி, படிக்க கற்றுக் கொடுத்தனர்.

கலெக்டர்

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் கலந்து கொண்டார். குழந்தையை மடியில் அமர வைத்து, கையை பிடித்து தட்டில் உள்ள அரிசியில் எழுதி கல்வியை தொடங்கினார். மேலும் குழந்தையின் நாக்கில் தங்க ஊசியாலும் எழுதினார்.

இதேபோல் பல்வேறு கோவில்கள், தனியார் பள்ளிகளிலும் வித்யாரம்பம், மாணவர் சேர்க்கை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com