சமயநல்லூர் புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி

சூசையப்பர் ஆலய தேர் பவனியில் திரளான இறைமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தேரில் எழுந்தருளிய சூசையப்பர்
தேரில் எழுந்தருளிய சூசையப்பர்
Published on

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் புனித சூசையப்பர் ஆலயத்தில் 116-ம் ஆண்டு பெருவிழா கடந்த 1-ந்தேதி தாளாளர் ராபார்ட் சைமன் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து புனித சூசையப்பர் ஆலயத்தில் தினந்தோறும் திருப்பலிகள் நடந்தன. மேலும் இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடந்தது. வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சூசையப்பர் சொரூபம் எழுந்தருளச் செய்யப்பட்டதும், தேர் பவனி தொடங்கியது. ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தேர், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியில் திரளான இறைமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சமயநல்லூர் ஆர்.சி. சமுதாய நலக்குழு இறைமக்கள் மற்றும் பங்கு அருள் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com