கவின் மற்றும் அபர்ணா தாஸை தொலைபேசியில் பாராட்டிய தனுஷ்

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’. இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கவின் மற்றும் அபர்ணா தாஸை தொலைபேசியில் பாராட்டிய தனுஷ்
Published on

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டாடா படத்தை பார்த்த தனுஷ், கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். தனுஷ் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து இருவரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com