தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு வினியோகம்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு வினியோகம்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு வினியோகம்
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சி விஜயபுரத்தில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

மேலும் 4 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவு வினியோகம் செய்யப்பட்டது.

தாசில்தார் அரசகுமார் உணவு வழங்கினார். 120 குடும்பங்களுக்கு சாம்பார் சாதம், பிரியாணி ஆகிய 800 பார்சல் உணவு வழங்கப்பட்டது.

இதில் நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com