

தானே,
டோம்பிவிலி ஆயிரே கிராமத்தில் ஆதிநாராயண் என்ற 4 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த 8 பேரை காயத்துடன் மீட்டனர். மேலும் சூரஜ் என்பவரை பிணமாக மீட்டனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் 2 பேர் சிக்கி இருப்பது தெரியவந்தது. இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று தீப்தி என்ற பெண்ணை பலத்த காயத்துடன் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர இடிபாடுகளில் சிக்கிய வங்கி ஊழியர் அரவிந்த் பாவ்சர் (70) என்பவரை பிணமாக மீட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.