

மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள் விவரம்: சுருக்கெழுத்தாளர், ஸ்டோர் கிளர்க், மல்டி டாஸ்கிங் ஸ்டாப், பெர்சனல் அசிஸ்டண்ட், பப்ளிக் ஹெல்த் நர்சிங் ஆபிசர் என 87 வகையான பிரிவுகளில் 3,003 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி; கல்வித் தகுதி பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிகிரி (துறைசார்ந்த பிரிவில்) உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு: 18 முதல் 35 வரை
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. இருப்பினும் எஸ்.சி , எஸ்.டி , மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு.
தேர்வு முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.05.2026
தேர்வு அறிவிப்பினை பார்க்க: https://ssc.gov.in/