அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது?

426 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Image Credits: AI
Image Credits: AI
Published on

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மேலும் 426 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிக அடிப்படையில் இப்பணியிடங்களை நிரப்ப உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, https://www.tngasa.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு:

கணினி பயன்பாடு, பயோ டெக்னாலஜி, வணிக நிர்வாகம், வேதியியல், வணிகம், கணினி அறிவியல், பொருளாதாரம், ஆங்கிலம், சுற்றுச்சுழல் அறிவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, புவியியல், வீட்டு அறிவியல், தமிழ், உளவியல், அரசியல் அறிவியல், சமூகப்பணி, புள்ளியியல், பொது நிர்வாகம், சுற்றுலா, விசுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட 29 பாடப்பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 426 பணியிடங்கள் உள்ளன. 01.07.2025 தேதிப்படி 57 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com