

சென்னை:
தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்டத் துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 4 அலுவலக உதவியாளர்கள், ஒரு அலுவலக துப்புரவாளர் மற்றும் 2 தோட்டத் துப்புரவாளர்கள் என மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.
சம்பளம்: 15,700 58,100
துப்புரவாளர்
கல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: 15,700 58,100
தோட்டத் துப்புரவாளர்
கல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ. 4,100 12,500
நேர்முகத்தேர்வு மூலம் நேரடியாக இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் 26.07.2024 மாலை 5.30 மணிக்குள் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். நேரிலும் விண்ணப்பங்களை வழங்கலாம்.
முகவரி:
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600008.
விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறை இணையதளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in/) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.