தமிழக பொதுப்பணித்துறையில் பயிற்சி பணியிடங்கள்: உடனே விண்ணப்பிங்க

மொத்தம் 760 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக பொதுப்பணித்துறையில் பயிற்சி பணியிடங்கள்: உடனே விண்ணப்பிங்க
Published on

அரசு கட்டிடங்களை கட்டுதல், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. இந்த துறையில் ஏற்படும் காலியிடங்கள் உரிய அரசு விதிகளை பின்பற்றி அவ்வப்போது நிரப்பப்படுகின்றன.அதேபோல அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களும் நிரப்பபடுகின்றன அந்த வகையில், தற்போது பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின் வருமாறு;

பணி நிறுவனம்: தமிழ்நாடு பொதுப்பணித்துறை

பயிற்சி பணி இடங்கள்: 760 (அப்ரண்டீஸ் பயிற்சி)

தகுதி: என்ஜினியரிங் பட்டதாரி, டெக்னீஷியன் (டிப்ளமோ), என்ஜினீயரிங் அல்லாத பட்டதாரி

கல்வி தகுதி: டிப்ளமோ, பி.இ., பி.டெக்., பி.ஏ., பி.எஸ்சி., பி.காம், பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.பி.எம். உள்ளிட்ட படிப்புகள்

வயது: அப்ரண்டீஸ் கொள்கை அடிப்படையில் வயது வரம்பு பின்பற்றப்படும்.

தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-6-2026

கூடுதல் விவரங்களுக்கு : https://nats.education.gov.in/boat-srp.php

X

Daily Thanthi
www.dailythanthi.com