

ரெயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நிரப்பி வருகிறது. தற்போது ரெயில்வேயில் உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்பட இருப்பதாக ஷார்ட் நோட்டீஸ் வெளியாகியுள்ளது.
இதுபற்றிய விவரங்கள் விருமாறு:
பணியிடங்கள்: ரெயில்வே உதவி லோகோ பைலட் 11,127
கல்வித்தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வரை- அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.19,900-63,200 வரை
விண்ணப்ப கட்டணம்: ரூ.400 , எஸ்சி/எஸ்டிபிரிவினருக்கு ரூ.250 தேர்வு எழுதிய பிறகு ரூ.300 திருப்பி அளிக்கப்படும், எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
விண்னப்பிப்பது எப்படி? ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT-1)
இரண்டாம் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு
கணினி அடிப்படையிலான திறன் தேர்வு
ஆவண சரிபார்ப்பு
மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 15.05.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.06.2026
ஆர்.ஆர்.பி இணையதளம்: https://www.rrbchennai.gov.in/