

புதுடெல்லி,
மத்திய அரசு துறைகளில் லோயர் டிவிஷன் கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நிரப்பி வருகிறது. 12- ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் பின்வருமாறு:
பணியிடங்கள்: லோயர் டிவிஷன் கிளர்க் (எல்.டி.சி)/ ஜூனியர் செகரட்டேரியேட் அசிஸ்டண்ட், டேடா எண்ட்ரி ஆபரேட்டர், டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ ஆகிய பதவிகளில் மொத்தம் 2,536 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.08.1999 க்கு முன்பாகவோ 01.08.2008 க்கு பிறகோ பிறந்தவராகவோ இருத்தல் கூடாது.
சம்பளம் எவ்வளவு? அதிகபட்சமாக ரூ.25,500 முதல் ரூ. 81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: கணிணி வழியிலான இரண்டு கட்ட எழுத்து தேர்வு, திறன் தேர்வு, டைப்பிங் டெஸ்ட் ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 07.10.2026
தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க: https://ssc.gov.in/