மத்திய அரசு வேலை: 14,582- பணியிடங்கள் : எஸ்.எஸ்.சி வெளியிட்ட அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு வேலை: 14,582- பணியிடங்கள் : எஸ்.எஸ்.சி வெளியிட்ட அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க
Published on

சென்னை,

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் 14,582 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம் : மத்திய அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் இத்தேர்வின் மூலம் நிரப்ப உள்ளது. அதாவது வெளியுறவு துறை, உளவு துறை, ரெயில்வே, தகவல் தொழில்நுட்ப துறை, வருவான வரித்துறை, சிபிஐ, தாபல் துறை, போதை மருந்து தடுப்புதுறை, வெளிநாட்டு வணிக துறை, என்ஐஏ, பாதுகாப்பு துறை உள்ளிட்டவற்றில் உள்ள உதவி அதிகாரி, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஆராய்ச்சி உதவியாளர், ஆடிட்டர், கணக்காளர், வரி உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். அதிகபட்சமாக 32 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் உண்டு.

விண்ணப்ப கட்டணம் : ரூ.100- ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2025

தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்த அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : கணிணி வழியில் இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். முதல் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இரண்டாம் கட்டத் தேர்வு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. தேவையான கல்வி தகுதி உள்ளவர்கள், எஸ்.எஸ்.சி.-யின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு அறிவிப்பினை படிக்க : https://ssc.gov.in

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com