மத்திய அரசு வேலை: 3,134 காலி பணியிடங்கள் - எஸ்.எஸ்.சி வெளியிட்ட அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசு வேலை: 3,134 காலி பணியிடங்கள் - எஸ்.எஸ்.சி வெளியிட்ட அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 3,134 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:

பணியிடங்கள் விவரம் :

லோயர் டிவிஷன் கிளர்க் (LDC),

ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்ஸ்ட்ண்ட்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ

ஆகிய பிரிவுகளில் 3,134 காலி பணியிடங்கள்

கல்வி தகுதி : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணித பாடப்பிரிவு எடுத்து படித்து இருப்பது அவசியம். எல்.டிசி பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.

வயது வரம்பு : 18 வயது நிரம்பியவர்களும் 27 வயது பூர்த்தி அடையாதவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சம்பளம் : பணிக்கு தகுந்தபடி மாறுபடும், அதிகபட்சமாக ரூ. 29,200 - 92,300/ வரை

விண்னப்பிக்க கடைசி நாள் : 18.07.2025

விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : கணிணி வழியில் இரண்டு கட்ட தேர்வு நடைபெறும்:

தேர்வு அறிவிப்பினை படிக்க : https://ssc.gov.in/

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com