மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

இதுவரை மருத்துவப்படிப்புக்கு 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
Published on

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு கடந்த 23-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அதில் 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. இந்த நிலையில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்து இருக்கிறது.

நாளை பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பிக்கலாம்

அதன்படி, tnmedicalselection.org என்ற இணையதளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பிக்க முடியும். இது வரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com