

வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் நாம் பல விதமான போட்டிகளை சந்திக்கின்றோம். தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, பலவற்றில் போட்டிகள் உருவாகின்றன.
இந்தப் போட்டிகளில் பங்கு பெறுபவர்களில் சிறப்பான தகுதி பெற்றவர்களையும் , நல்ல திறன் பெற்றவர்களையும் ,அறிவு திறன் அதிகம் கொண்டவர்களையும், ஆர்வத்தோடு ஈடுபடுபவர்களையும் இனம் கண்டு கொள்வதற்காக பலவித தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அந்தத் தேர்வுகளின் வகைகளையும், நோக்கங்களையும், எவ்வாறு அந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன? என்பது பற்றியும் சற்று விரிவாக பார்ப்போம்.
பொதுவாக தேர்வுகளை கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.
1. கல்விக்கான தேர்வுகள் (EDUCATIIONAL/ACADEMIC EXAMINATIONS)
2. போட்டித் தேர்வுகள் COMPETITIVE EXAMINATIONS)
3. நுழைவுத் தேர்வுகள் (ENTRANCE EXAMINATIONS)
4. தொழில்சார் தேர்வுகள் (PROFESSIONAL EXAMINATIONS)
5. தகுதி தேர்வுகள் (ELIGIBILITY EXAMINATIONS)
6. ஆளுமைத் தேர்வுகள் (PERS ONALITY TESTS)
7. திறனறித் தேர்வுகள் (Aptitude Tests)
இவைகள் தவிர, தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு தேர்வுகளை நிறுவனங்கள் அமைப்புகள் நடத்துகின்றன.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி அமைப்புகளில் ஏராளமான தேர்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.
தங்கள் நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவ ,மாணவிகள் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்களா என்பதை தேர்வு நடத்தி முடிவு செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்களின் திறமையை மதிப்பீடு செய்வதற்கும் இந்த தேர்வுகள் பயன்படுகின்றன.
நாள்தோறும் நடத்தப்பட்ட நடத்தப்படும் தேர்வுகள், வார தேர்வுகள், மாதத் தேர்வுகள், காலாண்டு தேர்வுகள், அரையாண்டு தேர்வுகள், ஆண்டு இறுதித் தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள், பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகள் என ஏராளமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ப்ரீ கேஜி முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை நடத்தப்படும் தேர்வுகள் பெரும்பாலும் மாணவ மாணவிகளின் பாட அறிவை மதிப்பீடு செய்யும் விதத்தில் அமைகின்றன. தேர்வு நடத்தி, மதிப்பெண்கள் வழங்கி மாணவ மாணவிகளின் கல்வித் தகுதியை நிர்ணயிக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்களுக்கு மேல்நிலை வகுப்பில் படிக்கும் தகுதியை கணக்கிடுகிறார்கள்.
ஒவ்வொரு வகுப்பிலும் பாட புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு, கற்கும் திறனை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையிலேயே மாணவர்களின் திறன்கள் முடிவு செய்யப்படுகின்றன.
ஒருவர் அடிப்படை கல்வியில் இருந்து பல்கலைக்கழக ஆராய்ச்சி கல்வி வரை எந்த அளவுக்கு சிறப்பு பெற்றிருக்கிறார் என்பதை நிர்ணயம் செய்வதற்காக கல்விசார் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. சுமார் மூன்று வயதில் இருந்து 21 வயது வரை பெரும்பாலும் இந்த கல்வி சார்ந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், பட்டம் மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளில் சேர்பவர்கள் சுமார் 30 வயது வரை தங்கள் கல்வி பயணத்தை தொடர்கிறார்கள்.
ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், பாடத்திட்டங்கள், பாட புத்தகங்கள், பள்ளி கல்லூரிகளின் வசதிகள், நூலக வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரின் கற்கும் திறன் மாறுபடுகிறது. இதனால், கல்விசார் தேர்வுகள் அடிப்படையில் பெரும்பாலான நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்குவதில்லை.
இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள், பல்வேறு நகரங்கள், கிராமங்கள், பழக்கவழக்கங்கள், இருப்பதால் கல்விசார் தேர்வுகள் அடிப்படையில் அனைவரையும் மதிப்பீடு செய்ய இயலாது என சில நிறுவனங்கள் அமைப்புகள் கருதுவதால் அவர்கள் போட்டி தேர்வுகளை (COMPETITIVE EXAMINATIONS) நடத்துகிறார்கள்.அந்தப் போட்டி தேர்வுகளின் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இது போட்டி நிறைந்த உலகம். "வேலை தேடுவதே வேலை" என படித்து பட்டம் பெற்ற பல இளைய உள்ளங்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், பட்டம் பெற்ற பட்டதாரிகள் வேலைக்கான தகுதி பெற்றவர்கள் என சில நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
மாறாக, தொழில், வணிக நிறுவனங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளில் சரியான நபர்களை தேர்ந்தெடுக்க பொதுவாக போட்டி தேர்வுகள் நடத்துவார்கள்.
இப்போதெல்லாம், ஒரு தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டால் லட்சக்கணக்கான பேர் விண்ணப்பம் அனுப்பவும், தேர்வு எழுதவும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
தகுதியான திறன் வாய்ந்த நபர்களை தேர்வு செய்வதற்காகவே இந்த போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
சுமார் ஆயிரம் பேர்களை தேர்வு செய்ய வேண்டும் என விளம்பரம் வெளியிட்ட நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்து குவியும் போது போட்டித் தேர்வுகள் நடத்த வேண்டிய கட்டாய சூழல் உருவாகிவிடுகிறது.
அது மட்டுமல்லாமல் சிறந்தவர்களை தேர்வு செய்ய வேண்டும் என எண்ணும் நிறுவனங்கள் இந்த தேர்வு நடத்தி தான் முடிவு செய்கின்றன.
இப்போதெல்லாம், சிவில் சர்வீசஸ் தேர்வு, தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு, ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வு, ரயில்வே தேர்வுகள், வங்கிகள் நடத்தும் தேர்வுகள், பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகள், அரசு வேலைக்கான தேர்வுகள், என ஏராளமான போட்டித் தேர்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல இயலாது. ஏனென்றால், அதிக மதிப்பெண் பெற்ற ஒருவரை விட இன்னொருவர் மிகச் சிறப்பான மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்றால் அவருக்கு வேலை வழங்க நிறுவனங்கள் விரும்புகின்றன. எனவே, மற்றவர்களை விட மிக அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என முயற்சி செய்து தேர்வு எழுதி , மிக அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும்.
"நீட் தேர்வு அவசியமா?"என்ற கேள்விகளோடு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
"பள்ளிகளில் தேர்வு நடத்தித்தான் திப்பெண்களை வழங்குகிறார்கள். பிறகு ஏன் இன்னொரு தேர்வு?" என்னும் கேள்வி பலரின் மனதில் எழுகிறது.
“நுழைவுத் தேர்வுகள் தேவையா?” என்ற கேள்வி எழுந்தாலும், ஏராளமான நுழைவுத்தேர்வுகளை பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கான தகுதியை நிர்ணயிக்கும் தேர்வாக இந்த நுழைவுத்தேர்வுகள் கருதப்படுகின்றன.
நுழைவுத்தேர்வுகள் நடத்தி, மாணவர்களின் மதிப்பெண்களை தரவரிசை படுத்தி, அதன் அடிப்படையில் மாணவர்களை கல்வி நிறுவனங்களில் சேர்க்கும் நடைமுறையை பல கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக "ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்' (JOINT ENTRANCE EXAMINATION) (JEE), மற்றும் கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் (GRADUATE APTITUDE TEST IN ENGINEERING)(GATE) தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
வடிவமைப்பு (DESIGN) படிப்புகளில் சேர "காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஃபார் டிசைன்' (COMMON ENTRANCE EXAMINATION) (CEED), மற்றும் நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஃபார் பேஷன் டிசைன் (NATIONAL INSTITUTE FOR FASHION DESIGN)(NIFT) ஆகிய நுழைவுத் தேர்வுகள் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்"(NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) (NEET), 'ஜவஹர்லால் நேரு இன்ஸ்டியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அன்ட் ரிசர்ச்'((JAWAHARLAL NEHRU INSTITUTE OF POST GRADUATE MEDICAL EDUCATION AND RESEARCH) [JIPMER], தேர்வு, ஆர்ம்டு ஃபோர்சஸ் மெடிக்கல் காலேஜ் (ARMED FORCES MEDICAL COLLEGE) தேர்வு ஆகிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அறிவியல் ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக “இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அன்ட் ரிசர்ச்” (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) (INDIAN INSTITUTE OF SCIENCE EDUCATION AND RESEARCH) (IISER), நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அன்ட் ரிசர்ச் (NATIONAL INSTITUTE OF SCIENCE EDUCATION AND RESEARCH) (NISER), "நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்"(NATIONAL ENTRANCE SCREENING TEST) ஆகிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
சமூக அறிவியல் (SOCIAL SCIENCE) படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக, டாடா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சோசியல் சயின்சஸ் (TATA INSTITUTE OF SOCIAL SCIENCES), வேளாண்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக “இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்” (THE INDIAN COUNCIL OF ARCHITECTURAL RESEARCH) (ICAR), “இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாண்டேஷன் மேனேஜ்மென்ட்” (INDIAN INSTITUTE OF PLANTATION MANAGEMENT) ஆகியவை நடத்தும் நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும்.
சட்டப் படிப்புகளில் (LAW) மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் காமன் லா அட்மிஷன் டெஸ்ட் (COMMON LAW ADMISSION TEST) (CLAT), நேஷனல் லா யுனிவர்சிட்டி நுழைவுத் தேர்வு (NATIONAL LAW UNIVERSITY ENTRANCE EXAMINATION) ஆகிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
விளையாட்டுத்துறை படிப்புகளில் (SPORTS) மாணவர் சேர்க்கைக்காக “நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ்”(NETAJI SBHAS NATIONAL INSTITUTE OF SPORTS), மற்றும் பொதுமக்கள் தொடர்பு (MASS COMMUNICATION) படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக “தி இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்” (THE INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION) ஆகிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மேலாண்மை (MANAGEMENT) படிப்புக்கான நுழைவுத்தேர்வு “காமன் அட்மிஷன் டெஸ்ட்” (COMMON ADMISSION TEST)(CAT), மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (MANAGEMENT APTITUDE TEST) (MAT) போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
வன மேலாண்மை (FOREST MANAGEMENT) படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரஸ்ட் மேனேஜ்மென்ட் (INDIAN INSTITUTE OF FOREST MANAGEMENT) என்ற நுழைவுத்தேர்வும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை படிப்புகளில் (HOTEL MANAGEMENT), நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் ஜாயின்ட் என்டரன்ஸ் எக்ஸாமினேஷன் (NATIONAL COUNCIL FOR HOTEL MANAGEMENT JOINT ENTRANCE EXAMINATION)(NCHMJEE) என்னும் நுழைவுத்தேர்வும் நடத்தப்படுகிறது.
சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை (TOURISM AND TRAVEL MANAGEMENT) படிப்பில் சேர, இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டூரிஸம் அன்ட் டிராவல் மேனேஜ்மெண்ட்(INDIAN INSTITUTE OF TOURISM AND TRAVEL MANAGEMENT) என்னும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றன.
பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட படிப்புகளில் (PETROLEUM AND ENERGY) மாணவர் சேர்க்கைக்காக இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பெட்ரோலியம் அன்ட் எனர்ஜி (INDIAN INSTITUTE OF PETROLEUM AND ENERGY) என்னும் அமைப்பு நுழைவுத்தேர்வை நடத்துகிறது.
திரைப்படம் (FILM) மற்றும் தொலைக்காட்சி படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (THE FILM AND TELEVISION INSTITUTE OF INDIA), நுழைவுத் தேர்வை நடத்துகிறது.
தேசிய பாதுகாப்பு, படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (NATIONAL DEFENCE ACADEMY and NAVAL ACADEMY) நடத்தப்படுகிறது.
கலை அறிவியல் கல்லூரி படிப்புகளில் சேர காமன் யூனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (COMMON UNIVERSITY ENTRANCE EXAMINATION) (CUET) என்னும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதுபோல் இன்னும் பல நுழைவுத்தேர்வுகளை தனியார் கல்வி நிறுவனங்களும் நடத்தி வருகின்றன.
சில குறிப்பிட்ட தொழில் துறைகளில் போட்டியாளர்களின் திறமையை மதிப்பீடு செய்வதற்காக அல்லது தொழல்சார்ந்த படிப்புகளில் சேருவதற்காக தொழில்சார் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
“சி.ஏ.” (CA) என அழைக்கப்படும் சார்ட்டர்டு அக்கவுண்டன்சி படிப்பில் சேருவதற்கும், காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்சி (CMA) படிப்பில் சேருவதற்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவைமட்டுமல்லாமல் கம்பெனி செகரட்டரி, சட்டத்துறை, மருத்து;வத்துறை சம்பந்தப்பட்ட துறைகளிலும் தொழில்சார் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
சிலவேளைகளில் சான்றிதழ் தேர்வாகவும் இத்தேர்வுகள் நடத்தப்படும்.
ஒருவருக்கு குறிப்பிட்ட படிப்பு அல்லது பணியில் ஈடுபட தேவையான அடிப்படை தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ள இந்தத் தகுதித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
நெட் என அழைக்கப்படும் “நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்” செட் என அழைகப்படும் ஸ்டேட் லெவல் எஜூகேஷனல் டெஸ்ட்”இ டெட் என அழைக்கப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு போன்றவைகளெல்லாம் தொழில்சார் தகுதித்தேர்வுகள் என கருதப்படுகின்றன.
பெரும்பாலும் ஆளுமைத்தேர்வுகள் ஒருவரின் மனப்பாங்கை அறிந்துகொள்ளவும், முடிவெடுக்கும் திறனை புரிந்துகொள்ளவும், குணநலன்களை அறிந்துகொள்ளவும் நடத்தப்படுகிறது. இந்தத்தேர்வுகள்மூலம் “ஒருவர் எந்த வேலை செய்ய பொருத்தமானவராக இருப்பார்” என்பதை புரிந்துகொள்ளலாம்.
ஒருவரின் செயல்பாட்டுத் திறனை மதிப்பிட இந்தத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக தொழில்நுட்பத்திறன் (Technical Skills) கணிதத் திறன் (Mathematical Skills) கணினித் திறன் (Computer Skills) மொழித்திறன் (Language Proficiency) பகுப்பாய்வு திறன் (Analytical Ability) தர்க்க ரீதியாக சிந்தனை செய்யும் திறன் (Logical Reasoning) ஆகியவற்றை அறிந்துகொள்ள திறனறித் தேர்வுகள் உதவுகின்றன.
இத்தகைய தேர்வுகளெல்லாம் வெவ்வேறு நிலைகளில், பல்வேறு இடங்களில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.
நான் பட்டப்படிப்புவரை படித்திருக்கிறேன். படிக்கும்போதே பாட சம்பந்தமாக பல தேர்வுகளை எழுதுயிருக்கிறேன். சிறப்பாக வெற்றி பெற்றிருக்கிறேன். நல்ல மதிப்பெண்களை வைத்திருக்கிறேன். எனக்கு ஏன் வேலை தரமாட்டேன் என்கிறார்கள்? என பல இளநெஞ்சங்கள் வேதனைப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது. இருந்தபோதும், ஒரு சாதாரண பொருளை வாங்கும்போதுகூட இந்தப்பொருள் நமக்கு பயன்படுமா என்று எவ்வளவோ சிந்தனை செய்து, நாலுபேரிடம் விசாரித்து, தெரிந்துகொண்டு அதன்பின்னரே அந்தப்பொருளை வாங்கவா வேண்டாமா? என முடிவெடுக்கிறோம்.
இதைப்போலத்தான் ஒருவரை பணிக்கு அமர்த்தும்முன்பே அவர் எந்த வகையில் நிறுவன வளர்ச்சிக்கும், நிறுவனத்தின் பெருமைக்கும் துணை நிற்பார் என சிந்தித்து, தேர்வுகள் நடத்தி தகுதியான, திறமையான நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
எனவே, எந்தத்தேர்வை எப்போது நடத்தினாலும், அந்தத்தேர்வில் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு உரிய பயிற்சிகளை பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.