நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்: 26-ந்தேதி வெளியீடு

மாணவர்கள் வரும் 26-ந்தேதி முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்: 26-ந்தேதி வெளியீடு
Published on

புதுடெல்லி,

நாடு முழுதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா கல்லுாரிகளில் மாணவர் சேர்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே 3-ந்தேதி நடக்கிறது.

இதற்கான விண்ணப்பப்பதிவு, கடந்த பிப்ரவரி 8-ந்தேதி துவங்கி, மார்ச் 11-ந்தேதி வரை நடந்தது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், நடப்பாண்டு 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு சுமார் 28 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

நீட் தேர்வு தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு வருகிறது. கடந்த காலங்களில் மாணவர்களுக்கான தேர்வு மையம் வெளி மாநிலங்களில், நீண்ட தொலைவில் அமைக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்தன.

அதன் காரணமாக இந்த முறை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் அவர்கள் எந்த நகரங்களில் தேர்வு மையம் வேண்டும் என்று கேட்டார்களோ அந்த அடிப்படையில் 99.2 விழுக்காடு அளவிற்கு மாணவர்கள் கேட்ட நகரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது

மேலும், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 26-ந்தேதி வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் வரும் 26-ந்தேதியில் இருந்து ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com