

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் அப்ரெண்டீஸ் பயிற்சி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
பணி விவரம்:
மராட்டியம் 586,
உத்தர பிரதேசம்; 580,
மத்திய பிரதேசம்; 489,
உத்தரகண்ட் 401,
மேற்கு வங்கம் 315,
குஜராத் 305,
தமிழகம் 202
உள்ளிட்ட மாநிலங்கள் உள்பட மொத்தம் 4500 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பட்டப்படிப்பு
வயது வரம்பு : 20 வயது முதல் 28 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: மாதம் ரூ.15 ஆயிரம்
தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.800 கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200 கட்டணம் ஆகும்.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 22.6.2026
கூடுதல் விவரங்களுக்கு: centralbank.bank