சென்னை ஐகோர்ட்டில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க..!

சென்னை ஐகோர்ட்டில் உயர்நிலை முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலான காலி பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
சென்னை ஐகோர்ட்டில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க..!
Published on

சென்னை ஐகோர்ட்டில் அலுவலக உதவியாளர், ரூம் பாய், தூய்மைப் பணியாளர்கள், வீட்டு உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொது எழுத்துத் தேர்வு, திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

1. சோப்தார் - 12

2. அலுவலக உதவியாளர் - 137

3. வீட்டு உதவியாளர் - 87

4. ரூம் பாய் - 4

5. தூய்மைப் பணியாளர் - 73

6. தோட்டப் பணியாளர் - 24

7. வாட்டர்மேன் - 2

8. சுகாதார பணியாளர் - 49

9. காவலர் - 4

சம்பள ஏற்ற முறை: ரூ.15,700 - ரூ.58,100 + சிறப்பு அலவன்ஸ்

இதேபோல் நீதிபதிகளின் உதவியாளர்கள் (28), தலைமை பதிவாளரின் தனி செயலாளர் (1), பதிவாளர்களின் உதவியாளர்கள் (14) மற்றும் கிளர்க் (4) ஆகிய காலி பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கான விரிவான அறிவிக்கை, விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை ஐகோர்ட்டின் ஆட்சேர்ப்பு இணையதளத்தில் (https://www.mhc.tn.gov.in) அறிந்துகொள்ளலாம்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 5-5-2025

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் : 6-5-2025

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com