

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள்: சீனியர் அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 10, மெக்கானிக்கல் 5, எலக்ட்ரிக்கல் 2 என மொத்தம் 17 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 1.6.2026 -தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: AGM (HR & Administration), Bharat Electronics Limited, BEL-Army school road, Nandambakkam, Chennai - 600 089.
கடைசிநாள்: 8.7.2026
கூடுதல் விவரங்களுக்கு: bel-india.in