

நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்க கூடிய ஐஐடி மெட்ராசில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் (கிரேடு I, II) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
பணியிடங்கள் விவரம்:
*விண்வெளிப் பொறியியல்
*பொறியியல் வடிவமைப்பு
*பயன்பாட்டு எந்திரவியல் மற்றும் உயிர்மருத்துவப் பொறியியல்
*உயிரித் தொழில்நுட்பவியல்
*மேலாண்மை ஆய்வுகள்
*வேதியியல்
*மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
என 18 வகையான பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி: பி.எச்.டி முடித்து இருப்பது அவசியம். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு குறையாத பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 36 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.70,900- ரூ.1,01,500 வரை
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.03.2026
தேர்வு அறிவிப்பை படிக்க; https://facapp.iitm.ac.in/img/AP-Area-and-Qualification_RA-2026.pdf