

சென்னை,
2026 - 2027 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி & யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
* 2026-2027 ஆம் கல்வியாண்டிற்காக, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் / அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், சித்தா (BSMS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஓமியோபதி (BHMS) மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியான நபர்களிடமிருந்து (ஒவ்வொரு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள்) உரிய தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வரவேற்கப்படுகின்றன.
* பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் / பி.என்.ஒய்.எஸ். மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான உரிய தகவல் தொகுப்பேட்டினை என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து "www.tnayushselection.org" கொள்ளலாம்.
* இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
* இளநிலை ஆயுஷ் மருத்துவப் பட்டப்படிப்புகளான சித்தா (BSMS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS) மற்றும் ஓமியோபதி (BHMS) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசியத் தேர்வு முகமையால் (National Testing Agency - NTA) நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை) [NEET (UG)] 2026-ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், முழுமையாகத் தகுதி வரிசை (Merit) அடிப்படையில் மேற்கொள்ளப்படும். யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) மருத்துவப் பட்டப்படிப்பிற்கான குறிப்பிடப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை, உரிய தகவல் தொகுப்பேட்டில் தகுதி நிபந்தனைகளின்படி, மேல்நிலைப் பள்ளி (+2) பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், முழுமையாகத் தகுதி வரிசை (Merit) அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
* மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnayushselection.org என்ற வலைதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.
* விண்ணப்பிக்கும்முன் உரிய தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும்.
* விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் / அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
* படிப்புப் பிரிவு : சித்தா (BSMS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஓமியோபதி (BHMS) மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS).
* படிப்பிற்கான காலம் : 5 1/2 ஆண்டுகள்
* படிப்பிற்கான கல்வித்தகுதி : 10, +2 (அறிவியல் பாடங்களில் தேர்ச்சி) / NEET- 2026 (UG)
அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகள்-02, இருக்கைகள்-160,
அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி-01, இருக்கைகள்-60,
அரசு யுனானி மருத்துவக் கல்லூரி-01-இருக்கைகள்-60,
அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி-01-இருக்கைகள்-50,
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-02-இருக்கைகள்- 160,
சுயநிதி சித்தா மருத்துவக் கல்லூரிகள்-13, இருக்கைகள்-820,
சுயநிதி ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரிகள்-05, இருக்கைகள்-270,
சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்-11-இருக்கைகள்-900,
சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-20 -
இருக்கைகள்-1900.
* சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் ஒதுக்கீட்டு விவரங்கள்: அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (பி.என்.ஒய்.எஸ். மருத்துவப் பட்டப்படிப்பிற்கு பொருந்தாது).
* சிறப்பு பிரிவு விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் ஒவ்வொரு சிறப்பு பிரிவிற்கும் ரூ.100/- கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும்.
* அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 31.07.2026 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும்.
* அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும் மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும்.
* பி.ஏ.எம்.எஸ். /பி.எஸ்.எம்.எஸ்./பி.யு.எம்.எஸ். /பி.எச்.எம்.எஸ். /பி.என்.ஒய்.எஸ். மருத்துவ பட்டப்படிப்புகள் கலந்தாய்வு குறித்த விரிவான விவரங்களுக்கு உரிய தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.