70 ஆயிரம் இந்தியர்களுக்கு ரஷ்யாவில் வேலை கிடைக்க வாய்ப்பு... வெளியான தகவல்

கட்டுமானம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் பணியாற்ற இந்திய தொழிலாளர்களை அழைத்துக்கொள்ள ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
image credits: AI
image credits: AI
Published on: 

புதுடெல்லி,

ரஷ்யாவில் இந்த ஆண்டில், கிட்டத்தட்ட 70 ஆயிரம் திறமையான இந்திய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தியைத் தாண்டி, இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு தற்போது வேலைவாய்ப்பு துறையிலும் விரிவடைந்து வருகிறது.

கட்டுமானம், லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் வாய்ப்பு

குறிப்பாக, கட்டுமானம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் பணியாற்ற இந்திய தொழிலாளர்களை அழைத்துக்கொள்ள ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வர்த்தகம், முதலீட்டை அதிகரிக்க திட்டம்

இதுகுறித்து தகவல் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: இந்தியா - ரஷ்யா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாகனங்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள், கடல் உணவுகள், பொறியியல் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் ஜவுளி உள்ளிட்ட 7 பொருட்கள் சார்ந்த துறைகளில் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க கவனம் செலுத்தப்படுகிறது.

எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு

எரிசக்தி துறையிலும் இரு நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்ந்து முக்கிய இடம் வகிக்கிறது. பல்வேறு நாடுகளிடமிருந்து எரிசக்தியைப் பெறும் வாய்ப்புகளை தொடர்ந்து வைத்திருப்பதும், இந்திய நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதும் அரசின் முன்னுரிமையாக உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com