

சென்னை,
ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) பணிபுரிய Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter ஆகிய பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். (Substation/Power Plant/ Industries) விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) பணிபுரிய பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் 22 முதல் 40 வயதிற்குட்பட்ட குறைந்தது 6 மாத பணி அனுபவம் கொண்ட Electrical Assistant பணிக்கு மாத ஊதியமாக ரூ.32,000 முதல் ரூ.36,000 வரையும், 3 வருட பணி அனுபவம் கொண்ட Electrician பணிக்கு ரூ. 36,000 முதல் ரூ. 52,000 வரையும், Electrical Fitter பணிக்கு ரூ.40,000 முதல் ரூ.52,000 வரையும், கூடுதல் நேரம் பணிபுரியும் நபர்களுக்கு அதற்கான கூடுதல் நேரப் பணிக்கான ஊதியமும் (Overtime Allowance) வழங்கப்படும்.
விசா மற்றும் இருப்பிடம் ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport Copy & Photo) ஆகியவற்றை 5.12.2026-ஆம் தேதிக்குள் அனுப்பவும்.
கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ்ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.