

சென்னை
பழங்குடியினர் நல இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகத்தில் துறைசார் நிபுணர்களாக (Subject Matter Experts) பணிபுரிய தகுதியான மானுடவியலாளர்களிடமிருந்து (Anthropologists) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் வல்லுநர்கள் தமிழ்நாடு பட்டியல் பழங்குடியினர் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல், கொள்கை உருவாக்கம், திட்ட மதிப்பீடு, திறன் மேம்பாடு மற்றும் இதர துறை சார்ந்த செயல்பாடுகளுக்காக பணிபுரிவார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முதுகலைப் பட்டமும், பிஎச்.டி பட்டமும் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஐந்து ஆண்டுகள் பழங்குடியின சமூகம் சார்ந்த ஆராய்ச்சி அனுபவம் இருக்க வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், பழங்குடியினர் நல இயக்குநரகத்தின் இணையதளத்தில் https://www.tntribalwelfare.tn.gov.in/ உள்ள விண்ணப்ப படிவத்தை 15 ஜூலை 2026, மாலை 3.00 மணிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இணையவழியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் இரண்டு அச்சு நகல்களை, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆதரவு ஆவணங்களுடன் 15 ஜூலை 2026, மாலை 3.00 மணிக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
Director, Directorate of Tribal Welfare, 1st Floor, Ezhilagam Annex Building, Chepauk, Chennai – 600 005. மேலும் விபரங்களுக்கு tntribalwelfare2018@gmail.com அல்லது 044–28516689 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.