தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி. ஊக்கத்தொகை திட்ட மதிப்பீட்டு தேர்வு - மதிப்பெண் பட்டியல் வெளியீடு

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி. ஊக்கத்தொகை திட்ட மதிப்பீட்டு தேர்வு - மதிப்பெண் பட்டியல் வெளியீடு
Published on: 

சென்னை,

தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் (TNSkills) இணைந்து நடத்தப்பட்ட 2027-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய தேர்வாணைய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கான தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத் தொகை திட்ட மதிப்பீட்டு தேர்வு 2026-ல் பங்கு பெற்றவர்களின் முழுமையான மதிப்பெண் பட்டியல், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆர்வலர்களிடமிருந்து சென்னை, முழுநேரப் பயிற்சிக்கு 225 நபர்கள், பகுதி நேரப் பயிற்சிக்கு 100 நபர்கள் மற்றும் மதுரை, முழு நேர பயிற்சிக்கு 100 நபர்கள், கோயம்புத்தூர், முழு நேர பயிற்சிக்கு 100 நபர்கள் என மொத்தமாக 525 நபர்கள் தேர்வு செய்யப்படுவர். மேற்படி மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆர்வலர்களில் விண்ணப்பிக்கும் ஆர்வலர்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.

சென்னை (முழு நேரம், பகுதி நேரம்) மற்றும் கோயம்புத்தூர் (முழு நேரம்), மதுரை (முழு நேரம்) ஆகிய அனைத்து மையங்களுக்கும் கலந்தாய்வு சென்னை-28, பசுமைவழிச்சாலை சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் மட்டுமே நடைபெறும். கலந்தாய்வில் ஆர்வலர்கள் தங்களது விருப்ப மையங்களை தெரிவு செய்யலாம்.

கலந்தாய்வின்போது மூல ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு (Certificate Verification) தற்காலிக சேர்க்கை ஆணை (Provisional Allotment Order) வழங்கப்படும். ஏற்கனவே, இப்பயிற்சி மையங்களில் முழுநேர மற்றும் பகுதி நேர பயிற்சி பெற்றவர்கள். இரண்டாவது முறை முழுநேர மற்றும் பகுதி நேர பயிற்சிக்கு விண்ணப்பிக்க இயலாது.

* விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 14.10.2026

* விண்ணப்பப் பதிவு முடிவடையும் நாள்: 20.10.2026

* முதற்கட்ட தெரிவுப் பட்டியல் வெளியீடு: 22.10.2026

* கலந்தாய்வு (ம) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள்: 25.10.2026, 26.10.2026, 27.10.2026

* முதல்நிலை தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கும் நாள்: 28.10.2026

கலந்தாய்வு (ம) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம்: அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், “காஞ்சி” பசுமைவழிச்சாலை, சென்னை-28.

மேலும், விரிவான விவரங்கள் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 93457 66957 என்ற புலன எண்(Whatsapp) மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com