

சென்னை,
தமிழக அரசின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு அரசானது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ், 2026-ம் ஆண்டின் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், ஆன்லைன் மூலம் (https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/) 19.06.2026 முதல் 30.06.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.